பொருட்பால் :: தெரிந்து வினையாடல்


குறள் :: 515

அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று.

செய்யும் வகையறிந்து, பொறுப்புடன் செய்யக் கூடியவனிடம் ஒரு வேலையை ஒப்படைக்கவேண்டும்; பிற வகையில் சிறப்பானவன் என்பதற்காகவே ஒருவனிடம் அதனை ஒப்படைக்கக்கூடாது.

Assess persons' knowledge and ability to turn a job to success before assigning them responsibility.

***

0 comments:

Post a Comment